'மங்காத்தா'வின் வெற்றிக்கு பிறகும் அமைதியாக இருக்கிறார் அஜித். தனது அடுத்த படமான 'பில்லா 2' படத்தில் ஆர்ப்பாட்டமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது 25-வது படமான 'அமர்க்கள(மு)ம்', இவரது 50-வது படமான 'மங்காத்தா'வும் வெற்றி பெற்ற மகிழ்ச்சி துளியும் பாதிக்காதது போல் இருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்பது போன்று சினிமா உலகில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரை நான் தூரத்தில் இருந்து ரசித்தபடியே, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். அவர் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் அடிவாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று எனது சினிமா பயணம் ஒரு முழுமையை அடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். 'மங்காத்தா'வின் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்", என்றார். வைரமேயானாலும் தங்கத்தோட சேர்ந்தாதான் அழகுனு புரியாதவரா..........?
Isaithenral.Com
சூப்பர் ஸ்டார் கையால் அடிவாங்க ஆசைப்படும் அஜித்!
சூர்யாவுக்கு ஜோடியாக அபிநயாவா?
வெறும் நடிகைகளின் படங்களை போஸ்டர்களில் போட்டுதான் கலெக்ஷன் பார்ப்பார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த வழக்கத்தை எட்டாக கிழித்து எறிந்துவிட்டு துட்டு குவித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். இதற்கு உதாரணமாக அமைந்த சமீபத்திய படம் 'மங்காத்தா'. பட போஸ்டர்களிலும் பேப்பர் விளம்பரங்களிலும் அஜித்தும், அர்ஜுனும் மட்டுமே இருப்பதால் த்ரிஷா, லட்சுமிராய் இருவரும் தங்கள் அரிசிப் பல் உடைகிற அளவுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இந்த டைப்பில் இன்னொரு செய்தி. '7-ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அபிநயா. (அப்ப ஸ்ருதி?) அது இல்லீங்க.. இந்த அபிநயா பிளாஷ்பேக்கில் வரும் சரித்திர சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். பட விளம்பரங்கள், பத்திரிகைகளுக்கு அனுப்பும் ஸ்டில்கள் இவைகளில் சூர்யா மட்டும் இருக்கட்டும். அல்லது ஸ்ருதியும், சூர்யாவும் இருக்கும் ஸ்டில்கள் மட்டும் வரட்டும். அபிநயா விஷயத்தை இப்போது காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தாராம் டைரக்டர் முருகதாஸ். அப்படியும் மீறி சில ஸ்டில்கள் வெளிவர, முருகதாஸ் முகத்தில் எள்ளும் கொள்ளும் என்கிறார்கள். ஓ.. பிளாஷ்பேக்கா...? அப்போ சைலண்ட்டா இருக்கிறதுதான் நியாயம்!
தெய்வத்திருமகள்' கூட்டணியுடன் எமி!
இயக்குநர் விஜய், சீயான் விக்ரம், அனுஷ்கா ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'தெய்வத்திருமகள்'. இப்படத்தை யுடிவி விநியோகம் செய்தது. இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைய இருக்கிறது. இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. 'தெய்வத்திருமகள்' படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எடுக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சீயான் விக்ரம். அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் கதையில் விக்ரமிற்கு இரண்டு கதாநாயகிகள். விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன்தான் அந்த நாயகிகள். அனுஷ்கா விஜய்யின் 'தெய்வத்திருமகளிலும்', எமி ஜாக்சன் 'மதரசாபட்டினத்திலும்' நடித்துள்ளனர்.
எமி ஜாக்சனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் விஜய்தான். இந்த படம் ஹாலிவுட் படமான 'பார்ன் ஐடென்டிட்டி'யைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. 'தெய்வத்திருமகளும்', 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. எனவே லொகேஷன் பார்ப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இது ஒரு ஸ்டைலான போலீஸ் ஆக்ஷன் படமாம். வரும் டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, ஏப்ரலில் முடியுமாம். மே மாதம் திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். கமலுடன் 'விஸ்வரூபம்' படத்தில் எமி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காம்பினேஷன் ஓ.கேதான் ஆனா... அடுத்தவங்க ஐடென்டிட்டி-ய மட்டும் விடமாட்டேன்றீங்களே........
ஏழை மாணவர்களா...? சூர்யாவை தொடர்பு கொள்ளுங்கள்
அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு... ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே? ஏழைங்க மனசயும் தொட்டுட்டீங்களே... ஒங்க மனசப்போல அகரமும் சிகரம் தொட வாழ்த்துகள்!
இனி வயசுக்கேத்த கேரக்டர் : அஜித் அதிரடி முடிவு!!
இனி தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க நடிகர் அஜித் முடிவெடுத்திருக்கிறாராம். மங்காத்தா படத்தில் அஜித் தனக்கு 40 வயது என்பதை வெளிப்படையாக சொல்லி ரசிகர்களின் கரகோஷம் வாங்கியிருந்தார். அதேபோல அந்த வயதுக்கேற்ற நரைமுடி, நரை தாடியுடன்தான் படம் முழுக்க வந்தார். இந்த நிஜ தோற்றம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டதாலும், பலரும் பாராட்டியிருப்பதாலும், இனி வயதுக்கேற்ற கேரக்டரில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித்.
மேலும் மங்காத்தா படத்தின் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும், படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கு ஒரு முறை மாஸ் ஹீரோ இமேஜை விட்டுவிட்டு இதேபோன்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவையும் அஜித் எடுத்திருக்கிறாராம். தற்போது பில்லா இரண்டாம் பாகத்தில் நடித்துகொண்டிருக்கும் அவர், தனது அடுத்த படத்திற்காக இரண்டு இயக்குநர்களை மனதில் வைத்திருக்கிறாராம். அதில் ஒருவர் ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாராஜா, மற்றொருவர் ஜெயம்கொண்டான் இயக்குநர் கண்ணன். இவர்களில் யாராவது ஒருவருக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுப்பார் என்கிறது கோடம்பாக்கத்து தகவல்
More Articles...
Page 1 of 147


